எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவள்ளூர், திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா கவரைபேட்டை பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த 12-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை 14 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த அந்த இளைஞரை, ஆந்திராவின் சூலூர்பேட்டை ரெயில்நிலையம் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞரிடம் தனிப்படை போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் கூறுகையில், "சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தேடப்படும் நபரின் அடையாளங்கள், கைதாகியுள்ள இளைஞருடன் ஒத்துப்போகிறது. முதற்கட்டமாக சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சிறுமியை வன்கொடுமை செய்ததாக கைதான இளைஞர் போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இதன்படி ஐஜி, டிஎஸ்பி, காவல் துறையினர் நடத்திய விசாரணையின் போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கைதான நபர்தான் தன்னை வன்கொடுமை செய்தவர் என சிறுமியும் உறுதிப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


