எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் ஹஹ்ரா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று காலை வனப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி நக்சலைட்டுகள், திடீரென போலீசார் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இரு தரப்பிற்கும் இடையே நடந்த மோதலில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், என்கவுன்டர் நடந்த பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், வனப்பகுதியில் மேலும் சில நக்சலைட்டுகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


