Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை: இதுவரை 3.60 லட்சம் பக்தர்கள் தரிசனம்

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      இந்தியா
Amarnath

Source: provided

ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

ஜம்மு- காஷ்மீரில் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைப்பகுதியில் இந்து மதக்கடவுள் சிவன் கோவில் உள்ளது. பனிசூழ்ந்த மலையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 3-ம் தேதி தொடங்கியது. யாத்திரை தொடங்கிய நாள் முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடப்பு ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கியது முதல் தற்போதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நேற்று அதிகாலை மேலும் 2 ஆயிரத்து 324 பேர் அமர்நாத் யாத்திரை மூலம் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அதேவேளை, நடப்பு ஆண்டு அமர்நாத் யாத்திரை வரும் 9ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் பனி லிங்கத்தை தரிசிக்க இன்னும் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில் 5.10 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து