எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவாறே முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பணிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையில், முதல்வருக்கு இதயத்துடிப்பில் சில வேறுபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர், ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார் என்றும், அவர் நேற்று மாலை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "அப்பல்லோ மருத்துவமனையில்(கிரீம்ஸ் சாலை) மருத்துவர் செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த முதல்வர், (நேற்று) மாலை வீடு திரும்ப உள்ளார். முதல்-அமைச்சர் நலமாக இருக்கிறார். 3 நாட்கள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சிகிச்சை முடிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், 6 நாட்களுக்கு பிறகு நேற்று வீடு திரும்பினார் மருத்துவமனையில் இருந்து காரில் புறப்பட்ட முதல்வரை வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


