Idhayam Matrimony

தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள்?

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2025      தமிழகம்
Modi-2 2025-07-27

Source: provided

சென்னை : தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் 5 கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் சார்பில் தமிழக அரசின் கோரிக்கை மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் வழங்கினார்.

* சமக்ர சிக்ஷா திட்டத்தில் தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும். தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ.2,121.59 கோடியை விடுவிக்க வேண்டும். மத்திய அரசு நிதி வழங்காமல் இருப்பது லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது.

* ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் உள்ள ரயில்வே திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

* கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ரூ.10.740 கோடியில் 34.8 கி.மீ தூரத்தில் அமைய உள்ள கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும். ரூ.11,368 கோடியில் 32 கி.மீ., தூரத்திற்கு அமைய உள்ள மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்.

* 2025-26ம் ஆண்டிற்கான முதல் தவணை நிதியை விரைவாக வழங்க வேண்டும்.

* இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் பாரம்பரிய மீன்படி உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு 5 கோரிக்கை மனுக்கள் பிரதமர் மோடியிடம் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து