எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.
பிகாரில் நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதில் சுமார் 60 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்களின் பெயரைத்தான் நீக்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் வாக்காளர்களை நீக்கி வெற்றி பெற பா.ஜ.க. முயல்வதாக எதிர்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாராளுமன்றத்தில் இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் கோருகின்றன. அதாவது இரண்டு விஷயங்கள் பற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதம் தொடங்கியுள்ளது. அதேபோல பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது ஒரு எரிந்துகொண்டிருக்கும் பிரச்னை. இது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல். ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்குரிமை என்பது மிகவும் அடிப்படையான உரிமை. அதன் மூலமாகவே அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் வாக்குரிமையே இல்லை என்றால் குடிமகனாக இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
வாக்குரிமையை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. இதுபற்றி அரசு கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும். விவாதிக்க வேண்டும். விவாதித்து நாம் முடிவெடுப்போம். பிரதமர் பாராளுமன்றத்திற்கு வருவதில்லை. மத்திய உள்துறை அமைச்சர் மிகவும் அரிதாகவே பாராளுமன்றத்திற்கு வருவார். பொறுப்புமிக்கவர்கள் சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வருகிறார்கள். பாராளுமன்றம் நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது. நாங்கள் ஜனநாயகத்தை மீட்டெடுக்க விரும்புகிறோம். அரசுக்கு பொறுப்பு இருக்கிறது. அவர்கள் பதிலளிக்க வேண்டும்" என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


