எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : பீகாரில் வெளியிடப்பட்ட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
பீகாரில் சட்டசபை தேர்தல் வருவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.திருத்தப்பணியின் முதல்கட்டம் முடிந்தநிலையில், தேர்தல் கமிஷன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளது. அந்த பட்டியல்தான், இறுதி பட்டியலாக இருக்கும் என்று தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், அதற்கு தேர்தல் கமிஷன் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-வீடு, வீடாக சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் அளித்துள்ளனர்.7 கோடியே 24 லட்சம் வாக்காளர்கள், கணக்கீட்டு படிவங்களை நிரப்பி சமர்ப்பித்துள்ளனர். 36 லட்சம் பேர், நிரந்தரமாக இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது எங்கு உள்ளனர் என்று தெரியவில்லை. 7 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ளன. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
அதுதான் இறுதி பட்டியல் என்ற மாயையை சிலர் உருவாக்க பார்க்கிறார்கள். ஆனால் அது இறுதியானது அல்ல.பட்டியலில் தவறுதலாக பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தவறுதலாக பெயர் நீக்கப்பட்டவர்கள் ஆகியோர் குறித்து சுட்டிக்காட்டுவதற்காக ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து செப்டம்பர் 1-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பிறகு ஏன் பிரச்சினை செய்கிறார்கள் என்று தெரியவில்லை.அரசியல் கட்சிகள் அந்த ஒரு மாத காலத்தில், தங்களது முகவர்கள் மூலமாக கோரிக்கை மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கச் சொல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


