Idhayam Matrimony

மீண்டும் களமிறங்கும் நடிகர் அப்பாஸ்

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2025      சினிமா
Abbas 2025-07-29

Source: provided

1990 மற்றும் 2000 ஆண்டுகளில் தனது நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அப்பாஸ், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு வருகிறார். ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து, தற்போது பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். பியாண்ட் பிக்சர்ஸ் ஜெயவர்த்தனன் இப்படத்தினை தயாரிக்க, ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக களம் இறங்குகிறார்.  அறிமுக இயக்குனர் மரியா ராஜா இலஞ்செழியன் இப்படத்தை இயக்குகிறார். ஸ்ரீ கௌரி பிரியா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு நகைச்சுவை நிரம்பிய குடும்பப் படமாக இருக்கும் என இப்படத்தின் இயக்குனர் மரியா ராஜா இலஞ்செழியன் தெரிவித்தார். படத்துக்கு இசை – ஜஸ்டின் பிரபாகரன்,  ஒளிப்பதிவு – மதன் கிறிஸ்டோபர், படத்தொகுப்பு – செல்வா ஆர்.கே, ஆர்ட் டைரக்ஷன் – குமார் கங்கப்பன்,  ஆடை வடிவமைப்பு – பிரவேண் ராஜா. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து