Idhayam Matrimony

சென்னையில் பாரா விளையாட்டு மைதானம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2025      தமிழகம்
DCM-1-2025-07-29

சென்னை, நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில்  பாரா பாட்மிட்டன் மைதானம் அமைக்கப்பட்டு வரும் பணியினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

பாரா-விளையாட்டுகளை  ஊக்குவிக்கும் வகையில் நாட்டிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் சென்னையில் நேரு பூங்கா விளையாட்டு வளாகத்திலும் மற்றும் திருச்சி, மதுரை, கடலூர் திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய 6 மாவட்ட விளையாட்டரங்கங்களில் மொத்தம் ரூ.7.38 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, கீழ்பாக்கம் நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் பாரா பாட்மிட்டன் மைதனம் அமைக்கப்பட்டு வரும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அனைத்து பணிகளையும் தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிலும் செய்து முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களிடம் அவர் வலியுறுத்தினார்.

சென்னை, நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில்  அரைவட்ட திறந்தவெளி மேற்கூரை கொண்ட பாரா இறகுப்பந்து ஆடுகளம், உட்கார்ந்து விளையாடும் பாரா கையுந்துபந்து ஆடுகளம், பாரா டேபிள் டென்னிஸ் ஆடுகளம், பாரா போச்சியா  ஆடுகளம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து