Idhayam Matrimony

நிமிஷா மரண தண்டனை ரத்தா..? - மத்திய வெளியுறவு துறை மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2025      இந்தியா
Nimisha-Priya 2025-07-29

Source: provided

புதுடெல்லி : ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரம் மறுத்துள்ளது. 

இது குறித்து வெளியுறவு அமைச்சக வட்டாரம், “நிமிஷா பிரியா வழக்கில் சில தனி நபர்கள் பகிரும் தகவல் துல்லியமானது அல்ல.” என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதி செய்வது போல், நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான செய்தியினை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்த மதத் தலைவர் அபுபக்​கர் முஸ்​லி​யார், அந்தப் பதிவை நீக்கியுள்ளார்.

 கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்​தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனா​வில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் செவிலிய​ராக பணி​யில் சேர்ந்​தார். கடந்த 2015-ல் அரசு செவிலியர் பணியை ராஜி​னாமா செய்த நிமிஷா, ஏமனைச் சேர்ந்த ஜவுளி வியா​பாரி தலால் அய்டோ மெஹ்​தி​யுடன் இணைந்து அங்கு புதிய மருத்​து​வ​மனையை தொடங்​கி​னார்.

கருத்து வேறு​பாடு காரண​மாக கடந்த 2017-ம் ஆண்டு மெஹ்​திக்​கு, நிமிஷா மயக்க ஊசி மருந்தை செலுத்​தி​னார். இதில் அவர் உயிரிழந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த சனா நகர நீதி​மன்​றம் கடந்த 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்​டனை விதித்​தது. இதை ஏமன் உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​தது. இதையடுத்​து, ஜூலை 16-ம் தேதி நிமிஷாவுக்கு மரண தண்​டனை நிறைவேற்​றப்​படும் என்று ஏமன் அரசு அறி​வித்​திருந்​தது.

சட்​டரீ​தி​யான முயற்​சிகள் தோல்வி அடைந்த நிலை​யில், மெஹ்தி குடும்​பத்​தினருக்கு ரூ.8.6 கோடி குரு​திப் பணம் அளித்து நிமிஷாவை மீட்க அவரது குடும்​பத்​தினர் தீவிர முயற்​சிகளை மேற்​கொண்டு வருகின்றனர். இதற்கு தேவை​யான உதவி​களை மத்​திய அரசு வழங்கி வரு​கிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து