Idhayam Matrimony

அஜித்குமார் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் : சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

புதன்கிழமை, 30 ஜூலை 2025      தமிழகம்
EPS-3 2025-07-30

Source: provided

சிவகங்கை : அஜித்குமார் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அஜித்குமார் சகோதரர் விரும்பிய இடத்தில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்புவனத்தில் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட அஜித்குமார் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மடப்புரத்தில் அஜித்குமார் தாயாருக்கும், சகோதரர் நவீன்குமாருக்கும் ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு குடும்பத்தார், அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். மறைந்த அஜித்குமாருக்கு நீதி கேட்டு அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடந்தது. அ.தி.மு.க. போராட்டத்தால் வேறு வழியின்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வேறுவழியின்றி தாக்குதலில் ஈடுபட்ட போலீசாரை கைது செய்துள்ளனர். அ.தி.மு.க.வின் அழுத்தம், போராட்டத்தால் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது. 

போலீசாருக்கு வந்த அழுத்தத்தால்தான் அஜித்குமார் தாக்கப்பட்டிருக்கிறார். காவல்துறை தாக்குதலின் பின்னணியில் யாரோ அழுத்தம் கொடுத்துள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இதுவரை 20 ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளன. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அஜித்குமார் சகோதரர் விரும்பிய இடத்தில் அரசு வேலை வழங்கப்படும். அஜித்குமார் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து