Idhayam Matrimony

ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

வியாழக்கிழமை, 31 ஜூலை 2025      தமிழகம்
Kavin-Kumar 2025-07-28

Source: provided

நெல்லை: 4-வது நாளாக ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி தமிழ்செல்வி. இவர்களது மகன் கவின் (வயது 27). இவர்கள் தற்போது தூத்துக்குடி பிரையண்ட் நகர்பகுதியில் வசித்து வருகிறார்கள்.நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இவர்களுக்கு சுர்ஜித் (24) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

இதில் சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் இதற்கு முன் தூத்துக்குடியில் வசித்து வந்தனர். அப்போது, கவினும், சுர்ஜித்தின் அக்காளும் ஒரே பள்ளியில் படித்து வந்தபோது பழகியுள்ளனர்.சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு வந்தார். 

தற்போதும் கவின், அந்த பெண்ணிடம் பேசிவந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சுர்ஜித் கடந்த 27-ந் தேதி பாளையங்கோட்டைக்கு வந்த கவினை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, சுர்ஜித்தை கைது செய்தனர். மேலும் கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை சரவணன், தாயார் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு அவர்கள் 2 பேரும் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில் கவினின் செல்போனும் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. கவின் கொலையாவதற்கு முன்பாக யார், யாரிடம் பேசினார். அதில் காணப்படும் படங்கள் ஆகியவற்றை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கவின் உடல் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. 

இந்தநிலையில், நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 4-வது நாளாக உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கவினை படுகொலை செய்த சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் தாயை கைது செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது. தனது சகோதரியை காதலித்ததால் பட்டியலின இளைஞர் கவினை சுர்ஜித் படுகொலை செய்தார். சுர்ஜித் சரணடைந்த நிலையில் உதவி ஆய்வாளர்களான அவரது பெற்றோரை கைது செய்ய வேண்டும் என கவினின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த அம்மாவையும் கைது பண்ணனும்; அதன் பிறகுதான் என் மகனின் உடலை வாங்குவேன் நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட ஐ.டி. மென்பொறியாளர் கவினின் தந்தை கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து