எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : த.வெ.க. பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் சுமார் 80 மாவட்டங்களில் நாளை தமிழகம் முழுவதும் நடக்கிறது
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் கட்சித் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுமார் 69 ஆயிரம் பூத் முகவர்களை நியமனம் செய்துள்ளார்.
பூத் கமிட்டி உறுப்பினர்கள் தினந்தோறும் அந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று த.வெ.க. கொள்கைகள் மற்றும் வருங்கால முதல்வர் வேட்பாளர் விஜய் என்பதையும் மக்களிடையே பிரசாரம் செய்து வருகின்றனர். இது மட்டுமின்றி தொகுதியில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகளையும் நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரச்சனைகளை தீர்க்க கோரி மனு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் த.வெ.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை ( 3-ந்தேதி) சுமார் 80 மாவட்டங்களில் நடக்கிறது. கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு வாக்குச்சாவடியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வாக்காளர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது உள்பட 2026 தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் பற்றி தீவிரமாக ஆலோசனை நடைபெற இருக்கிறது.
பூத் முகவர்களாக அந்தந்த பகுதியில் இருப்பவர்களே நியமனம் செய்யப்பட்டுள்ளதால் ஒரு வீடு விடாமல் இரவு-பகல் பாராமல் த.வெ.க.வினர் பணியாற்றி வருகின்றனர். கூட்ட ஏற்பாடுகளை கட்சித் தலைவர் விஜய் உத்தரவின்படி, பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தலின்படி 234 தொகுதிகளிலும் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


