எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லண்டன் : இந்தியாவுக்கு எதிராக கிராவ்லி - பென் டக்கெட் ஜோடி மாபெரும் சாதனை படைத்துள்ளது.
224 ரன்களுக்கு ஆல் அவுட்...
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 69.4 ஓவர்களில் 224 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கிராவ்லி-டக்கெட் ஜோடி...
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராவ்லி - பென் டக்கெட் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டனர். இதனால் ரன் ரேட் வேகமாக நகர்ந்தது.
8-வது முறை...
வெறும் 7 ஓவர்களில் இந்த கூட்டணி இங்கிலாந்து அணியை 50 ரன்களை கடக்க வைத்தது. டெஸ்ட் போட்டிகளில் பென் டக்கெட் - ஜாக் கிராவ்லி ஜோடி இந்தியாவுக்கு எதிராக 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைப்பது இது 8-வது முறையாகும்.
புதிய சாதனை...
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக அதிக முறை 50+ ரன்கள் அடித்த இங்கிலாந்து தொடக்க ஜோடி என்ற மாபெரும் சாதனையை பென் டக்கெட் - ஜாக் கிராவ்லி படைத்துள்ளனர். இதற்கு முன்னர் குக் - ஸ்டிராஸ் ஜோடி 7 முறை அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள டக்கெட் - ஜாக் கிராவ்லி கூட்டணி புதிய சாதனை படைத்துள்ளது.
சமன்...
ஒட்டு மொத்தத்தில் டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக முறை 50+ ரன்கள் அடித்த தொடக்க ஜோடிகளின் சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீசின் கோர்டன் கிரீனிட்ஜ் & டெஸ்மண்ட் ஹேய்ன்ஸ் கூட்டணியை (8 முறை) பென் டக்கெட் - ஜாக் கிராவ்லி ஜோடி சமன் செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


