எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காந்தி நகர், கடவுள் சிவபெருமான் ஆசியுடன் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீர்த்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7ம் தேதி இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பி.எம். கிசான் திட்ட பயனாளர்களான 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு 20வது தவணத்தொகையாக தலா ரூ. 2 ஆயிரம் ரூபாய் விகிதம் 20 ஆயிரத்து 500 கோடி ரூபாய் தொகையை பிரதமர் மோடி விடுவித்தார். மேலும், உத்தரபிரதேசத்தில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்த பிரதமர் மோடி, 2 ஆயிரத்து 183 கோடி ரூபாய் மதிப்பிலான 52 புதிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் எனது இதயத்தில் துக்கத்தை ஏற்படுத்தியது. நமது மகள்களின் குங்குமத்தை இழக்கச்செய்தவர்களை பழிதீர்க்க நான் உறுதியளித்தேன். கடவுள் சிவபெருமான் ஆசியுடன் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீர்த்தேன். நாட்டு மக்கள் 140 கோடி பேரின் ஒற்றுமையே ஆபரேஷன் சிந்தூரின் வலிமையாக மாறியது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


