எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி, அரசு நலத்திட்ட உதவி நிகழ்ச்சி மேடையில் தி.மு.க. எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த மருத்துவ முகாம் திட்டத்தினை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.
அதன்படி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், தி.மு.க. எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் அம்மாவட்ட கலெக்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சி மேடைக்கு வந்த தி.மு.க. எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் வரவேற்பு பேனரில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் படம் மட்டும் இடம்பெற்றிருக்கிறது. நடைமுறைபடி நாடாளுமன்ற உறுப்பினர் படம் இருக்க வேண்டும் என கூறி கலெக்டரிடம் அவர் கோபம் அடைந்தார்.
பின்பு நிகழ்ச்சி மேடையில் நலத்திட்ட உதவி வழங்கும்போது, நலத்திட்ட அட்டையை தங்க தமிழ்ச்செல்வன் கையில் இருந்து பிடுங்கி நான் தான் வழங்குவேன் என எம்.எல்.ஏ. மகாராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் மக்கள் முன்னிலையில் இருவரும் கனத்த குரலை எழுப்பி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கலெக்டர், காவல்துறையினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் அனைவரும் தங்க தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ. மகாராஜனை சமாதானம் செய்தனர். இதனால் நிகழ்ச்சி விரைவிலே முடிக்கப்பட்டது.
அரசு நலத்திட்ட உதவி நிகழ்ச்சி மேடையில் தேனி ஆட்சியர் முன்னிலையில் தி.மு.க. எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


