Idhayam Matrimony

பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 20-வது தவணை தொகையை விடுவித்தார் பிரதமர்

சனிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2025      இந்தியா
Modi 2024-12-20

டெல்லி, பிரதமர் மோடி, நாடு முழுவதும் 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு பி.எம் கிசான் திட்டத்தின் 20வது தவணைத்தொகையை விடுவித்தார்.

பி.எம். கிசான் நிதி திட்டத்தை மத்திய அரசு 2019ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டப்படி, சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. 4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு இதுவரை 19 தவணைகளாக 3.69 லட்சம் கோடி ரூபாய் வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பி.எம். கிசான் திட்டத்தின் 20வது தவணைத்தொகை விவசாயிகளுக்கு இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, நாடு முழுவதும் 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு பிஎன் கிசான் திட்டத்தின் 20வது தவணைத்தொகையை விடுவித்தார்.

பி.எம். கிசான் திட்ட பயனாளர்களான 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு 20வது தவணத்தொகையாக தலா ரூ. 2 ஆயிரம் ரூபாய் விகிதம் 20 ஆயிரத்து 500 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேசத்தில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்த பிரதமர் மோடி, 2 ஆயிரத்து 183 கோடி ரூபாய் மதிப்பிலான 52 புதிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து