எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காஸா : காஸாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் வெள்ளிக்கிழமை மட்டும் 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி 1,200 பேர் கொல்லப்பட்டு மேலும் அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்ததில் இருந்து அங்கு போா் நடைபெற்று வருகிறது. இதில் 60,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர்.
மேலும், தற்போது காஸாவில் உணவு தேடி, உணவு மையங்களை நோக்கிச் செல்லும் குழந்தைகள் உள்பட அங்குள்ள மக்களை இஸ்ரேல் ராணுவத்தினர் இரக்கமின்றி சுட்டு வீழ்த்துகின்றனர். அங்குள்ள குழந்தைகள் உள்பட அனைவரும் பசியால் செத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதேநேரத்தில் ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வான்வழியாக டிரோன்கள் மூலமாக மக்களளுக்கு உணவுப் பொருள்களை வழங்கின.
இந்நிலையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காஸாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் கொடூரமான நாள் என்றும் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் ரத்தக்களரியாக இருந்தது என்றும் அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் கூறுகிறார்.
பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் சொசைட்டி, காஸாவின் தென்மேற்கே தண்ணீர் லாரிகளுக்காகக் காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் 90 பேர் காயமடைந்ததாகவும் கூறுகிறது. 2 குழந்தைகள் மற்றும் ஒரு இளம்வயது நபர் பசியால் இறந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


