எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நியூயார்க் : உலகின் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அமெரிக்க தொழில் அதிகர் எலான் மஸ்க் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
மிக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகளை புதிய உச்சங்களுக்கு கொண்டு சென்றுள்ளது. இதன் அடிப்படையில் உலகின் முதல் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது.1987ம் ஆண்டு முதல் இத்தகைய பட்டியலை அந்த பத்திரிகை வெளியிட்டு வருகிறது. 2025ம் ஆண்டு, ஆக.1ம் தேதி நிலவரப்படி உலகின் டாப் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் 9 பேர் அமெரிக்கர்கள் ஆவர். ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.
பட்டியல் படி உலகின் முதல் பெரும் செல்வந்தர் என்ற இடத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தக்க வைத்துக் கொண்டு உள்ளார். இவரின் சொத்து அமெரிக்க மதிப்பில் 401 பில்லியன் டாலர் ஆகும்.அவரைத் தொடர்ந்து லாரி எலிசன் 2வது இடத்தை பிடித்துள்ளார். இந்த டாப் 10 பட்டியலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் 10-வது இடத்தில் உள்ளார். இவரை தவிர மற்ற 9 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். டாப் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியல் விவரம்;-
எலோன் மஸ்க் முதல் இடம் இவரின் சொத்து மதிப்பு (401 பில்லியன் டாலர்), 2-வது இடத்தில் லாரி எலிசன்(299.6 பில்லியன் டாலர்) 3-வது மார்க் ஜுக்கர்பெர்க்(266.7 பில்லியன் டாலர்) 4-வது ஜெஃப் பெசோஸ்(246.4 பில்லியன் டாலர்), 5-வது லாரி பேஜ்(158 பில்லியன் டாலர்), 6-வது ஜென்சன் ஹுவாங்(154.8 பில்லியன் டாலர்), 7-வது செர்ஜி பிரின்(150.8 பில்லியன் டாலர்) 8-வது ஸ்டீவ் பால்மர்(148.7 பில்லியன் டாலர்) 9-வது வாரன் பஃபெட்(143.4 பில்லியன் டாலர்), 10-வது இடத்தில் பெர்னார்ட் அர்னால்ட்(142.9 பில்லியன் டாலர்) ஆகியோர் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


