எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : உத்திரமேரூர் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. அந்த வகையில், உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளார். அவர் தற்போது கட்சி, அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்தார். நேற்று நடந்த சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திரமேரூர் தொகுதியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு நிர்வாகியிடமும் அவர் கருத்துக்களை கேட்டறிந்தார். தொகுதி களநிலவரம், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளுதல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் 1-1 உரையாடலில் ஈடுபட்டார்.
தி.மு.க. நிர்வாகிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தகவல்கள் சேகரித்து வைத்திருந்தார். அதன் அடிப்படையில் அவர் நிர்வாகிகளிடம் கேள்விகளை எழுப்பி தொகுதி நிலவரம் பற்றி ஆய்வு செய்தார். தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


