எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுன் ஒன்றுக்கு ரூ.1,120 ஏற்றம் கண்டு விற்பனையானது. இதனால் ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறை குறித்த அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பின்னர் தங்கம் விலை உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது. தற்போது ஆடி மாதம் என்பதால் தமிழகத்தில் திருமணம் மாதிரியான சுப நிகழ்ச்சிகள் அதிகம் திட்டமிடப்படாத நிலையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதும் கவனிக்தக்கது. மேலும், வரும் ஆவணி மாத முகூர்த்த நாட்களில் தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருப்பதாக சாமானியர்கள் கருதுகின்றனர்.
சென்னையில் நேற்று (சனிக்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,290-க்கு விற்பனையானது. அதேபோல் பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனையானது. 24 காரட் தங்கத்தின் விலையும் நேற்று கிராமுக்கு ரூ.153 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,135-க்கு விற்பனையானது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.125 என விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,680-க்கு விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


