எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : 'ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இனி வாங்காது என கேள்விப்பட்டேன், அது உண்மையா பொய்யா என்பது தெரியாது. ஆனால் இது ஒரு நல்ல முடிவு , ' ' என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஜனவரியில் இரண்டாவது முறை பதவிக்கு வந்ததில் இருந்து சர்வதேச நாடுகளுடனான வர்த்தக பற்றாக்குறையை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கினார். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பல நாடுகள், அதே அளவுக்கு இறக்குமதி செய்வதில்லை; அமெரிக்க பொருட்களுக்கு மிக அதிக வரி விதிக்கின்றன என குற்றஞ்சாட்டினார்.
கடந்த ஏப்ரலில் வர்த்தக பற்றாக்குறை உள்ள நாடுகள், அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி முறையை அறிமுகப்படுத்தினார். அதன் பின் பேச்சு நடத்துவதற்கு வசதியாக அந்த வரியை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நிறுத்தி வைத்தார். பேச்சு நடத்தி அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்த நாடுகளுக்கு வரியை குறைத்து உத்தரவிட்டார்.
இந்தியா சார்பில் பேச்சு நடந்த போதும், அமெரிக்காவுடன் எந்த முக்கிய ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை. மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையும், ராணுவ தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்வதையும் அமெரிக்கா எதிர்க்கிறது. இது குறித்து அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் கூறுகையில், ''உலகிலேயே இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
' 'மேலும், உக்ரைனில் நடத்தி வரும் போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அனைவரும் வலியுறுத்தி வரும் வேளையில், இந்தியா சீனாவுடன் இணைந்து ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இது நல்லதல்ல ' ' என்றார்.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில், ' 'ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி கச்சா எண்ணெய் வாங்காது என தகவல் கிடைத்தது. அது உண்மையா, பொய்யா என்பது தெரியாது. ஆனால் நல்ல முடிவு. என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


