எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : உத்தர பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். 15 பேருடன் சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கோண்டா மாவட்டத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கவும், காயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையவும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் ராமரைப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி. இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


