எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தென்காசி : குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலிஅருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். வெளியூர்களில் இருந்து வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலரும் பழைய குற்றாலம் முதல் மெயின் அருவி வரை செல்லும் பகுதியில் அமைந்துள்ள தனியார் தோட்ட மர நிழல்களில் உணவுகள் சமைத்து, அருவிகளில் குளித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் வருகையால் அருவிக்கரைகளை ஒட்டி உள்ள கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேரம் செல்ல செல்ல சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


