எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஓ.டி.பி. விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலை அணுகும் விதமாக ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தி.மு.க. நடத்தி வருகிறது. இதில், பொதுமக்களிடம் இருந்து ஓ.டி.பி. பெற சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. தரப்பில் மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஓ.டி.பி. பெறும் விவகாரத்தில் பொதுமக்களிடம் எந்தவித வற்புறுத்தலும் செய்யப்படவில்லை. அவர்கள் தங்களுடைய சுய விருப்பத்தின் பேரில் தான் கையெழுத்திட்டு வருகின்றனர் என்று கூறப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மன் மற்றும் ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், ஆதார் விவரங்களை மக்களிடம் இருந்து கட்சி சேகரிக்கவில்லை என்று அறிக்கை சமர்ப்பித்தார்.
இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. இது தொடர்பாக பேசிய நீதிபதிகள், "இந்தப் பிரச்சினை முக்கியத்துவம் வாய்ந்தது. முழு செயல்முறையும் சந்தேகத்திற்குரியது. நீதிமன்றம் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். நீங்கள் ஐகோர்ட்டையே நாடுங்கள். இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை." என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


