Idhayam Matrimony

த.வெ.க. மாநாடு நடைபெறும் தேதி மாற்றம்

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Vijay 2024-09-09

மதுரை, த.வெ.க. மாநாடு தேதி தொடர்பான புதிய மனுவை காவல்துறையிடம் புஸ்ஸி ஆனந்த் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதி பந்தல்கால் நடும் பணி நடைபெற்றுது. அன்றைய தினமே, மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மாநாடு தொடர்பாக அனுமதி மனுவை அளித்தார். இதையடுத்து த.வெ.க. மாநாட்டின் ஏற்பாடுகள் பாரபத்தி பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆனால் விநாயகர் சதுர்த்தி 27-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால், மாநாடு தேதியை மாற்றுமாறு த.வெ.க.விடம் காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து 17-ம் தேதி மாநாடு நடத்திக்கொள்வதாக த.வெ.க. தரப்பில் காவல்துறையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சுதந்திர தினத்தை காரணம் காட்டி 17-ம் தேதியும் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது.

வார இறுதி நாட்கள் அல்லாமல் 18 முதல் 22-ம்  தேதிக்குள் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்யுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, த.வெ.க. மாநாடு தேதி தொடர்பான புதிய மனுவை காவல்துறையிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து