Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ஓ.பன்னீர் செல்வம்

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2025      தமிழகம்
OPS 2024-11-11

சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. , பா.ஜ.க. இடையே கூட்டணி உருவாகியுள்ளது.  சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர் செல்வம் நேரம் கேட்டிருந்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கபடவில்லை. இந்த நிகழ்வை தொடர்ந்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பு அறிவித்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 31ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வம் 2 முறை சந்தித்தார். காலை நடைபயிற்சியின்போதும், மாலை முதல்வரை அவரது வீட்டிற்கே சென்றும் சந்தித்தார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க.வில் இணைவாரா? என்றும் கேள்வி எழும்பியது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட பதிவில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பில் அரசியல் இல்லை. மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முதல்வரை நேரில் சென்று நலம் விசாரித்தேன். மேலும், மு.க.முத்து மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கவே சென்றேன். இந்த சந்திப்பை அரசியலாக்குவது நாகரீகமற்ற செயல். என்னுடைய மனைவி, தாயார் இறந்தபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நான் தி.மு.க.வில் இணையப்போவதாகவும், கூட்டணி வைக்கப்போவதாகவும் வதந்தி பரப்புகின்றனர். முதல்வருடனான சந்திப்பை வைத்து என்னை தி.மு.க.வின் பி டீம் என பேசுகின்றனர். முதல்வரை நான் சந்தித்ததை வைத்து அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சிக்கின்றனர்.

2026ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பதே எங்கள் நோக்கம். தமிழ் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையிலேயே முதல்வரை சந்தித்தேனே தவிர, இதில் அரசியல் இல்லை. நான் எங்கிருந்தாலும் மக்களின் உரிமை, நலன் என்று வந்தால் ஜெயலலிதா வழியில் செயல்படக்கூடியவன்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து