எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர், எங்கள் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகரில் பா.ஜ.க. வாக்குச்சாவடி குழு பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அருப்புக்கோட்டையில் பாரதி மகாலிலும், விருதுநகரில் எஸ்.எஸ்.கே. கிராண்ட் மகாலிலும் நடைபெற்ற கூட்டங்களுக்கு கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில இணை பொறுப்பாளருமான சுதாகர் ரெட்டி முன்னிலை வகித்தார். பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில், நயினார் நாகேந்திரன் பேசுகையில், “2026 சட்டமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்தும், திருநெல்வேலியில் இம்மாதம் 17-ம் தேதி 5 நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி மாநாடு முதன் முதலாக நடைபெற உள்ளது. கூட்டணி முடிவு செய்யப்பட்ட பின்னர் யார் யாருக்கு எத்தனை சீட்டுகள் எந்த இடங்கள் என முடிவு செய்யப்படும்.
தமிழ்நாட்டில் செயின் பறிப்பு மட்டுமல்லாமல் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் அதிகமாக நடக்கின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 3 கொலைகள் நடந்துள்ளன. தென் மாவட்டத்தில் அதேபோல படுகொலைகள் நடைபெறுகிறது.
நடுத்தர தொழில்கள் செய்பவர்கள் தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த அரசு வீழ்த்தப்பட வேண்டிய அரசு. வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டிய அரசு. எங்கள் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


