முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் அதிக முறை 4 விக்கெட்: சிராஜ் வரலாற்று சாதனை

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Siraj jpg-

Source: provided

ஓவல்: இங்கிலாந்தில் அதிக முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்த முதல் ஆசிய பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை சிராஜ் படைத்தார். 

தொடர் சமன்...

இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

ஆட்ட நாயகன்...

ஓவல் டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு முகமது சிராஜ் முக்கிய பங்கு வகித்தார். அவர் 5 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார். இந்த டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்கு கிடைத்தது.

அதிக விக்கெட்... 

இந்த தொடரில் சிராஜ் மொத்தம் 23 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் பும்ராவின் சாதனையை சமன் செய்தார். பும்ரா 2021-22 இங்கிலாந்தில் தொடரில் 23 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக இருவரும் இருக்கிறார்கள்.

ஆசிய பந்து வீச்சாளர்... 

இங்கிலாந்தில் அதிக முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்த முதல் ஆசிய பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை சிராஜ் படைத்தார். அவர் 7-வது முறையாக 4 விக்கெட்டுக்கு மேல் (11 போட்டி) எடுத்துள்ளார். இலங்கையை சேர்ந்த முரளீதரன் (6 டெஸ்ட்), பாகிஸ்தானின் வாக்கர் யூனுஸ் (10 போட்டி) ஆகியோர் தலா 6 முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்து இருந்தனர். இவர்களை சிராஜ் முந்தினார். 

3-வது முறையாக... 

மற்ற இந்திய வீரர்களில் பும்ரா 5 தடவையும், இஷாந்த் சர்மா 4 முறையும் 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர். சிராஜ் 3-வது முறையாக ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். 2023 ஆண்டு வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான போர்ட் ஆப் ஸ்பெயின் டெஸ்டிலும், 2024-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டிலும் ஆட்ட நாயகன் விருது அவருக்கு கிடைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து