Idhayam Matrimony

ட்ரம்ப் மிரட்டலுக்கு இடையே அஜித் தோவல் ரஷ்யா பயணம்

புதன்கிழமை, 6 ஆகஸ்ட் 2025      உலகம்
Ajith-Thoval 2025-08-06

Source: provided

மாஸ்கோ: அஜித் தோவலை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இம்மாத இறுதியில் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணை கொள்முதலை இந்தியா உடனே நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார். அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோ சென்றுள்ளார். அவரின் இந்தப்பயணம் இந்தி இந்தியா-ரஷ்யா உறவை வலுப்படுத்துவதற்கானது என்று கூறப்படுகிறது. அஜித் தோவலின் பயணம் முன்னரே திட்டமிடப்பட்டதாகும். டிரம்பின் வரி விதிப்பு களால் இந்தப் பயணம் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. 

அமெரிக்கா மீண்டும் மீண்டும் ரஷ்யா விஷயத்தில் இந்தியாவை குற்றம் சாட்டி வருவதால், இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால் அஜித் தோவலின் பயணம் ரத்து ஆகாமல் இருப்பது இந்தியாவின் நிலைபாட்டை காட்டுகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இந்த மாத இறுதியில் ரஷ்யா செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து