Idhayam Matrimony

அமித்ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்து: ராகுல்காந்திக்கு நிபந்தனை ஜாமீன்

புதன்கிழமை, 6 ஆகஸ்ட் 2025      இந்தியா
Rahul-Gandhi-2023-04-13

Source: provided

ராஞ்சி: மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு எதிரான அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜார்க்கண்டின் சாய்பாசாவில் உள்ள எம்பி-எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் நீதிமன்றம் கூறியது. ராஞ்சியில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் இருந்து ராகுல் காந்தி வந்தடைந்த நீதிமன்றத்திலும், அதைச் சுற்றியும் பாதுகாப்பு போடப்பட்டது.

ஜூன் 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஜூன் 2ஆம் தேதி ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் ராகுல்காந்தி மனுத் தாக்கல் செய்தார். ஜூன் 10ஆம் தேதி ராகுல்காந்தி நீதிமன்றம் குறிப்பிட்ட நாளில் ஆஜராக முடியாது என்று காங்கிரஸ் எம்பியின் வழக்கறிஞர் ஐகோர்ட்டில் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலாக ஆகஸ்ட் 6ஆம் தேதியை வழங்குமாறு கோரினார். ஐகோர்ட்டு அவரது கோரிக்கையை ஏற்றது.

2018 ஆம் ஆண்டு சாய்பாசாவில் நடந்த ஒரு பேரணியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு எதிராக அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக பிரதாப் குமார் என்பவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து