முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: டாப் 5-ல் ஜெய்ஸ்வால்

புதன்கிழமை, 6 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Jaiswal 2024-02-02

Source: provided

லண்டன்: ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தன்னுடைய வாழ்நாளின் சிறந்த தரநிலையை இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்து அசத்தியுள்ளார்.

புதிய பட்டியல்...

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஆண்டர்சன் - டெண்டுல்கர் தொடர் விறுவிறுப்பாக நடந்து முடிந்துவிட்டது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் கோப்பைகளைப் பகிர்ந்து கொண்டனர். சிறந்த டெஸ்ட் தொடராகக் கருதப்படும் இந்தத் தொடரில் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், வாரந்தோறும் புதன்கிழமை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வெளியிடப்படும் ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியானது.

ஜெய்ஸ்வால்....

இந்தப் பட்டியலில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளார். தொடரின் துவக்கத்தில் தொடர்ந்து சொதப்பி வந்தாலும் ஓவலில் நடைபெற்ற 5-வது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி 118 ரன்கள் விளாசி அசத்தினார். மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், 2 சதம், 2 அரைசதம் உள்பட 411 ரன்கள் குவித்து அசத்தினார். இதன்மூலம், 792 புள்ளிகள் பெற்று 3 இடங்கள் முன்னேறி தனது சிறந்த தரநிலையான 5 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சுப்மன் சரிவு...

ஓவல் டெஸ்ட்டில் 2 இன்னிங்ஸ்கள் முறையே 21 மற்றும் 11 ரன்கள் எடுத்த இந்திய அணி கேப்டன் கில், 4 இடங்கள் குறைந்து 13 இடத்துக்கு சரிந்துள்ளார். மேலும், அவர் 754 புள்ளிகள் எடுத்துள்ளார். காயம் காரணமாக கடைசிப் போட்டியில் இருந்து விலகிய இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ஒரு இடம் சரிந்து 8-வது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்தில் தொடர்கிறார். மற்றொரு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

முதல் பத்து இடங்கள்:

1) ஜோ ரூட் - 908 புள்ளிகள்.

2) ஹாரி புரூக் - 868 புள்ளிகள்.

3) கேன் வில்லியம்சன் - 858 புள்ளிகள்.

4) ஸ்டீவ் ஸ்மித் - 816 புள்ளிகள்.

5) யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 792 புள்ளிகள்.

6) டெம்பா பவுமா - 790 புள்ளிகள்.

7) கமிந்து மெண்டிஸ் - 781 புள்ளிகள்.

8) ரிஷப் பந்த் - 768 புள்ளிகள்.

9) டேரில் மிட்செல் - 748 புள்ளிகள்.

10)  பென் டக்கெட் - 747 புள்ளிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து