முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி: இந்தியாவின் கருத்துக்கு அமெரிக்க அதிபர் பதில்

புதன்கிழமை, 6 ஆகஸ்ட் 2025      உலகம்
Trump

Source: provided

வாஷிங்டன்: ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வதாக இந்தியா தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அது குறித்து பதிலளித்துள்ளார்.

கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் பணத்தை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பயன்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

அதேபோல், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வரி விதித்துள்ளார். அந்த வகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். மேலும்,  இந்த வரியை உயர்த்துவேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவிடமிருந்து யுரேனியம், உரம், வேதிப்பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்வதாகவும், அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுவதாகவும் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வது குறித்து ட்ரம்ப் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வது குறித்து எனக்கு தெரியாது. இது குறித்து நான் ஆய்வு செய்துவிட்டு உங்களிடம் முழு விவரத்தையும் தெரிவிக்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து