முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: நீதிமன்ற விசாரணை உள்ளதால் பார்லி.,யில் விவாதிக்க முடியாது: மத்திய அமைச்சர் ரிஜிஜு தகவல்

புதன்கிழமை, 6 ஆகஸ்ட் 2025      இந்தியா
Kiran-Rijiju 2023-01-16

Source: provided

புதுடெல்லி: எஸ்.ஐ.ஆர். விவகாரம் சுப்ரீம் கோர்ட் விசாரணையில் உள்ளதால் அது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மக்களவை நேற்று காலை கூடியதும் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் மீண்டும் எழுப்பின. விவாதத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதை அடுத்து எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டதால், அவை முதலில் 12 மணி வரையும் பின்னர் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டன.

2 மணிக்கு மக்களவை கூடியதும் எதிர்க்கட்சிகள் மீண்டும் எஸ்ஐஆர் விவகாரத்தை எழுப்பின. இதற்கு பதிலளித்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட் விசாரணையில் உள்ளன. நீதிமன்ற விசாரணையில் உள்ள விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க விதிகளில் இடமில்லை. மேலும், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என தெரிவித்தார். மேலும், பாராளுமன்ற மக்களவையில் முக்கிய மசோதாக்கள் சட்டங்களாக நிறைவேற்ற உள்ளதால் உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் கிரண் ரிஜிஜு வலியுறுத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து