முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநாடு குறித்து கேள்வி: காவல்துறைக்கு தவெ.க. பதில்

வெள்ளிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Vijay 2024-09-09

Source: provided

மதுரை : விஜய்யை தவிர வேறு எந்த முக்கிய பிரமுகர்களும் விருந்தினராக கலந்து கொள்ளவில்லை என்று த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

த.வெ.க. தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக 2-வது மாநில மாநாடு மதுரையில் 25-ந்தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார்.  அதற்கிடையில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால்    மாநாடு 21-ந்தேதி  நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் திருமங்கலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனுசுல் நாகரிடம் மாநாடு குறித்த மனுவை கடந்த 5 ஆம் தேதி அளித்தனர். அப்போது, போலீசார்  42 கேள்விகளை முன் வைத்தனர்.

இந்த நிலையில், போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு த.வெ.க. தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: மதுரை மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜய்யை தவிர வேறு எந்த முக்கிய பிரமுகர்களும் விருந்தினராக கலந்து கொள்ளவில்லை. மாநாட்டில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி இல்லை. பெண்களுக்கு என்று தனியாக பெண் தன்னார்வலர்கள், முதியவர்களுக்கு தனி இருக்கைகள் ஏற்பாடு. மாநாடு நடைபெறும் பகுதியில் வாகன நிறுத்தத்திற்கு சுமார் 400 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.  300 பேருந்து 750 வேன்கள் மற்றும் ஆயிரம் இருசக்கர வாகனங்கள் வர வாய்ப்புள்ளது. உள்ளே மற்றும் வெளியே செல்வதற்கு என்று 18 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளிட்ட பதில்கள் த.வெ.க. தரப்பில் அளிக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து