Idhayam Matrimony

ராணுவத்தால் காஸா கட்டுப்படுத்த இஸ்ரேல் திட்டம் - ஐ.நா. எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2025      உலகம்
UN-member-2023-09-21

Source: provided

காஸா : காஸா பகுதியை, ராணுவ ரீதியாக முழுவதுமாக ஆக்கிரமிக்கும் திட்டத்தை இஸ்ரேல் அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வோல்கர் டுர்க் வலியுறுத்தியுள்ளார்.

காஸா பகுதியினுள் செயல்பட்டு வரும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களான ஹமாஸ் படையைத் தோற்கடிக்க, இஸ்ரேல் ராணுவம், போர் தாக்குதல்கள் இல்லாத பகுதிகளில் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை வழங்கியபடி, காஸாவை முழுவதுமாகத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போவதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். இதற்கு பல்வேறு, நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், இந்தத் திட்டம் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வோல்கர் டுர்க் கூறியதாவது:- 

இஸ்ரேலின் இந்தத் திட்டமானது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது. ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட இருநாட்டு தீர்வுகளின் படி இஸ்ரேல் உடனடியாக அதன் ஆக்கிரமிப்புகளைக் கைவிடவேண்டும். இது பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்கு எதிரானது” என அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, காஸாவினுள் தடையின்றி நிவாரணப் பொருள்கள் நுழைவதற்கு இஸ்ரேல் அனுமதிக்க வேண்டுமெனவும், பாலஸ்தீன போராளிக் குழுக்கள் எந்தவொரு நிபந்தனையுமின்றி பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேபோல், இஸ்ரேலும் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து