Idhayam Matrimony

பெண்கள், திருநங்கைகளுக்கு மானியத்துடன் புதிய ஆட்டோக்கள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

சனிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Udayanidhi-1 2024-11-17

சென்னை, பெண்கள், திருநங்கை ஓட்டுநர்களுக்கு  ரூ. 1 லட்சம் மானியத்துடன் புதிய ஆட்டோ வாகனங்களை துணை முதல்வர் வழங்கி, கொடியசைத்து வழியனுப்பினார். 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பாவது:-

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நேற்று)  (8.8.2025) ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தமிழ்நாடு அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள 100 பெண்கள் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மானியத்துடன் புதிய ஆட்டோ வாகனங்களை வழங்கி, கொடியசைத்து வழியனுப்பினார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,   தொழிலாளர் நலன் காப்பதில், நம்முடைய தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்ந்து வருகின்றது. கலைஞர் அவர்களால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தனித்தனி நல வாரியங்கள் உருவாக்கப்பட்டது. தற்போது தொழிலாளர் நலத்துறையின் சார்பாக 20 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.  தமிழ்நாட்டினுடைய மகளிர் பொருளாதார சுதந்திரம் பெற வேண்டும் என்று நம்முடைய முதல்வர் தலைமையிலான அரசு  செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் தான் தொழிலாளர் நலத்துறை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.  இன்றைக்கு இந்தியாவிலேயே மகளிரை, திருநங்கையரை ஆட்டோ ஓட்டுநர்களாக பயிற்சி கொடுத்து நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்து, அவர்களுக்கு மானியத்துடன் ஆட்டோ கொடுக்கின்ற ஒரே மாநிலம் நம்முடைய தமிழ்நாடு தான்.  

 இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து