எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிம்லா, இமாசலபிரதேசத்தில் உள்ள பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
இமாசலபிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள புல்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 40). அரசு பள்ளி ஆசிரியர். இவரது மகன் தீபக் (15), மகள் ஆர்த்தி (17) பள்ளியில் படித்து வந்தனர். கடந்த 3 தினங்களுககு முன்பு இரவு ராஜேஷ் குமார் ஒரு காரில் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு மனைவி ஹன்சோ (36), மைத்துனர் ஹேம்ராஜ் (37), நண்பர் ராகேஷ் குமார் (44) ஆகியோருடன் சொந்த கிராமத்துக்கு திரும்பி கொண்டு இருந்தார். தீசா சான்வாஸ் கிராமம் அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள 500 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழுந்து அங்கிருந்த ஒரு பாறை மீது மோது நொறுங்கியது. இதில் காரில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தை கண்ட கிராம மக்கள் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதைஅடுத்து அங்கு சென்ற போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சிதைந்த காருக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை 6 மணி நேரம் போராடி மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


