Idhayam Matrimony

குஜராத்: விபத்தில் 4 பேர் பலி

சனிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2025      இந்தியா
Acctnet

காந்திநகர், குஜராத் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 4 பேர் தீயில் கருகி பலி

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் ஹரிபார் கிராமத்துக்கு அருகே தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவு கண்டெய்னர் லாரி கவிழ்ந்து. அப்போது கண்டெய்னரை பின்தொடர்ந்து வந்த லாரி பாதையை மாற்ற முயன்றது. இதில் திடீரென பின்னால் வந்த ஒரு காரின் மீது லாரி பயங்கரமாக மோதியது.

இதனால் லாரி, கார் இரண்டும் தீப்பிடித்து எரிந்தன. இதில் கார், லாரியில் சிக்கி கொண்டவர்கள் மீதும் தீ பரவியது. காரில் இருந்த 2 மாணவர்கள், லாரியில் இருந்த 2 பேர் தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் இருந்த 7 மாணவர்கள் காயம் அடைந்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இரு வாகனங்களிலும் ஏற்பட்ட தீயை அணைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜூனாகத்தில் உள்ள ஒரு உறைவிட பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கட்ச் மாவட்டத்தில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து