Idhayam Matrimony

இந்திய அணி அபார வெற்றி

சனிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Woman Kercat 2024-06-28

Source: provided

மகளிருக்கான ஆசிய கோப்பை யு-20 கால்பந்து போட்டியில் இந்திய அணி துர்க்மேனிஷ்தானை 7-0 என வீழ்த்தி அசத்தியது. குரூப் டி பிரிவில் இந்திய அணி 1 வெற்றி, 1 டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் சுபாங்கி 7, 42-ஆவது நிமிஷங்களிலும் சுலஞ்சனா 38, 90+4-ஆவது நிமிஷங்களிலும் தலா இரண்டு கோல்களை அடித்தார்கள். மற்ற இந்திய வீராங்கனகளான தேவி (14’), சனு டோய்சம் (35’), பூஜா (65’) தலா ஒரு கோலை அடித்து அசத்தினார்கள்.

ஸ்வீடனைச் சேர்ந்த ஜோகிம் அலெக்சாண்டர்சன் தலைமையில் இந்திய மகளிரணி அசத்தலாக விளையாடி வருகிறது. கடைசி போட்டியாக மியான்மருடன் இந்திய அணி நாளை விளையாடவிருக்கிறது. இதில் வென்றால் ஆசிய கோப்பைக்குத் தகுதிபெறும். ஒருவேளை இந்தியாவின் ஆட்டம் சமனில் முடிந்தால், துர்க்மேனிஷ்தான் இந்தோனிஷ்யாவிடம் ஒரு புள்ளியாவது பெற வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகும். இருப்பினும் இந்த வெற்றி கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.

_________________________________________________________________________________________________________________________________________

வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயினின் ஜெசிகா மனெய்ரோ உடன் மோதினார். இதில் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து, தொடரில் முதல் சுற்றோடு வெளியேறினார்.

_________________________________________________________________________________________________________________________________________

டி-20: ரஷித்கான் சாதனை

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலாவது ஆட்டத்தில் லண்டன் ஸ்பிரிட் - ஓவல் இன்விசிபில் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த லண்டன் ஸ்பிரிட் 18.4 ஓவரில் 80 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக டர்னர் 21 ரன்கள் அடித்தார். ஓவல் சார்பில் ரஷித் கான், சாம் கர்ரன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இந்நிலையில், இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் ரஷித் கான் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 651 ஆக உயர்ந்தது.

இதன்மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் 650 விக்கெட்டுகளைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார். இவர் 478 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளார். அதன்பின், இலக்கை நோக்கி ஆடிய ஓவல் அணி 13.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

_________________________________________________________________________________________________________________________________________

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: நிஷேஷ் பசவரெட்டி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீரரான நிஷேஷ் பசவரெட்டி, ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக் உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட பசவரெட்டி 7-6 மற்றும் 7-5 என்ற நெர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இவர் 2-வது சுற்றில் ஸ்வெரெவ் உடன் மோத உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து