எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவனந்தபுரம் : மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணியின் வருகை ரத்து செய்யப்பட்டதால் கேரள கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மெஸ்சி வருகை...
மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி இந்த ஆண்டு அக்டோபர்- நவம்பர் மாதத்தில் கேரளா வருகை தந்து விளையாட இருந்தது. ஆனால், ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக குற்றம்சாட்டிய அர்ஜென்டினா கால்பந்து சங்கம், வருகையை ரத்து செய்துள்ளது. இதனால் கேரள கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஒப்பந்தம் கையெழுத்து...
இந்த நிலையில் இது தொடர்பாக இடது சாரி கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கேரள மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் கூறுகையில் "கேரள மாநில அரசு இந்த வருடத்தில் அர்ஜென்டினா அணி கேரளா வருவதை மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. ஸ்பான்சர்களுக்கும், அணிக்கும் இடையில்தான் ஒப்பந்தம் கையெழுத்தானது. அரசு இதில் ஒரு பகுதியாக இருக்கவில்லை. அக்டோபர்- நவம்பரில் கேரளாவில் விளையாட பணம் கொடுத்துள்ளோம். இது நடைபெறவில்லை என்றால் குட்பை சொல்ல வேண்டியதுதான். மற்றபடி என்ன செய்ய முடியும்?. இந்த வருடம் அவர்கள் விளையாடவில்லை, மற்றபடி எங்களுக்கு விருப்பம் இல்லை" என்றார்.
குற்றச்சாட்டு...
முன்னதாக, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோஷப், காங்கிரஸ் மக்களவை எம்.பி. ஷஃபி பரம்பில் ஆகியோர் "அர்ஜென்டினா அணி கேரள மாநில அரசு மீது குற்றம்சாட்டியதால், மாநில அரசு கட்டாயம் பதில் அளிக்க வேண்டம். லட்சக்கணக்கான பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தற்போது, அர்ஜென்டினா அணி, இது தொடர்பாக விளக்கமாக தெரிவித்துவிட்டது. மாநில மக்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும். அர்ஜென்டினா கால்பந்து அணியை கொண்டு வந்து மாநில அரசு ஆதாயம் தேட முயற்சித்தது. அவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டனர். மாநில அரசு ஒப்பந்த விதிமுறையை மீறி விட்டதாக அர்ஜென்டினா கால்பந்து சங்கம் தெரிவித்துவிட்டது" எனத் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


