முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுமார் ரூ.1,650 கோடி செலவில் பெங்களூருவில் புதிய கிரிக்கெட் மைதானம் : முதல்வா் சித்தராமையா ஆலோசனை

சனிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Siddaramaiah 2023 04 16

Source: provided

பெங்களூரு, : கர்நாடகத்தில் அமைக்கப்படும் புதிய கிரிக்கெட் திடல் குறித்து முதல்வா் சித்தராமையா கலந்தாலோசித்துள்ளார்.

80,000 பேர்...

கர்நாடக வீட்டுவசதி வாரியம் அளித்த முன்மொழிவை முதல்வர் சித்தராமையா ஏற்றுக்கொண்டுள்ளார். அதில், மாநிலத்துக்கான விளையாட்டு காம்ப்ளக்ஸ், 80,000 பேர் உட்கார்ந்து பார்க்ககூடிய கிரிக்கெட் திடலும் அடங்கியிருக்கின்றன. பொம்மசந்திராவில், சூர்யா சிட்டி புறநகர் பகுதியில் இந்த கிரிக்கெட் திடல் அமையவிருக்கிறது. 

2-வது பெரிய மைதானம்...

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கிரிக்கெட் திடலாக இது அமையவிருக்கிறது குறிப்பிடத்தக்கது. முன்னதாக குஜராத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியம்தான் அதிகமான பார்வையாளர்கள் (1.32 லட்சம்) உட்காரும் இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. சின்னசாமி திடலில் ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த 11 உயிரிழப்புகள் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை விசாரித்த மைக்கேல் குன்ஹா இந்தத் திடல் வெறுமனே 32,000 பேர் மட்டுமே பார்க்க முடியும். அதிகமானோர் கூடுவதற்கு ஏற்றதல்ல என அறிக்கையை தாக்கல் செய்தார். அதனால், புதிய இடத்துக்கு திடலை மாற்றும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.1,650 கோடி செலவில்...

இந்தத் திட்டத்துக்கு 100 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1,650 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது. மாநில அரசின் உதவி இல்லாமல் கர்நாடக வீட்டுவசதி வாரியமே இதனை செய்து முடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திடலில் 8 இன்டோர், அவுட்டோர் விளையாட்டுகள், பயிற்சிக்கான வசதிகள், விடுதிகள், நீச்சல்குளம், நிக்ழ்சிகளுக்கான மேடைகள் என உருவாக்கப்படவிருக்கிறது. இது மட்டுமில்லாமல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் விதமாகவும் ஸ்போர்ட்ஸ் சிட்டியை உருவாக்க வேண்டும் எனவும் அந்தக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து