முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன்னம்பிக்கையை அதிகரித்த காம்பீரின் வார்த்தைகள் : சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Sanju-Samson

Source: provided

மும்பை : தான் மனச்சோர்வுடன் இருந்தபோது காம்பீரின் வார்த்தைகள் தன்னம்பிக்கையை அதிகமாக்கியது என்று சஞ்சு சாம்சன் தெரிவித்தார்   

விக்கெட் கீப்பர்... 

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், இந்திய அணிக்காக அறிமுகமாகி 9 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இதுவரை அவர் 50 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். சிறப்பான திறமை இருந்தும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று பேசப்பட்டு வந்த வேளையில் தற்போது அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

2 முறை டக் அவுட்...

இந்நிலையில், பயிற்சியாளர் கவுதம் காம்பீர் குறித்து பேசிய சஞ்சு சாம்சன், "நான் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் டக்அவுட்டான பிறகு, டிரஸ்ஸிங் ரூமில் நான் மனச்சோர்வுடன் அமர்ந்திருந்தேன். அதைக் கவனித்த கவுதம் காம்பீர், என்ன நடந்தது? என்று கேட்டார். 

தன்னம்பிக்கை...

நான் அவரிடம் இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் இரண்டிலும் ரன் அடிக்காமல் கோட்டைவிட்டுவிட்டேன் என்று கூறினேன் அதற்கு அவர், 'அதனால் என்ன? நீங்கள் 21 முறை டக்-அவுட்டானால் மட்டும் தான் நான் உங்களை அணியிலிருந்து நீக்குவேன்' என்று கூறினார். அவரின் வார்த்தைகள் என் தன்னம்பிக்கையை அதிகமாக்கியது" என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து