Idhayam Matrimony

நாளை நமதே விமர்சனம்

திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2025      சினிமா
Na-ai-namate 2025-08-11

Source: provided

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து தொகுதி பட்டியல் சாதியினருக்கானதாக அறிவிக்கப்படுகிறது. அந்த சாதியை சேர்ந்த நாயகி மதுமிதா தேர்தலில் போட்டியிட முடிவு செய்கிறார்.  அவருக்கு வழக்கம் போல் பலவித மிரட்டல்கள் வர, அனைத்தையும் கடந்து, தேர்தலில் வெற்றி பெற்றாரா  இல்லையா? என்பதை உண்மை சம்பவங்களின் பின்னணியோடு சொல்வதே ‘நாளை நமதே படம்’. கதையின் நாயகியாக நடித்திருக்கும் மதுமிதா, படத்தை தன் தோளில் சுமந்திருக்கிறார். வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா மற்றும் கிராமத்தினராக நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் மண்ணின் மைந்தர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். பிரவீன் ஒளிப்பதிவு அருமை..  ஹரிகிருஷ்ணனின் இசை படத்துக்கு வலிமை. எழுதி இயக்கியிருக்கும் வெண்பா கதிரேசன்,  சாதி பிரிவினை மற்றும் சாதி ரீதியிலான ஒடுக்குமுறை பற்றியும் தனிநபர் சுயநலத்திற்காக சாதி எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.  மொத்தத்தில், ‘நாளை நமதே’  இன்றைக்கு தேவையான ஒரு படைப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து