எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும், நாடு முழுவதும் இந்த பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய நிலை உள்ளது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
டெல்லியில் தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சுப்ரீம் கோர்ட், நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித்திரியும் அனைத்து தெருநாய்களையும் பிடித்து நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் சுப்ரீம் கோர்ட் கூறியதாவது: நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும். தெரு நாய் பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய நிலை உள்ளது. தெருநாய்க்கடி தொடர்பான தகவலை தெரிவிக்க ஹெல்ப்லைனை ஒருவாரத்தில் அமைக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து நாய்க்கடி சம்பவங்களும் பதிவு செய்யப்படும்.
ஏதாவது ஒரு தனிநபரோ அல்லது அமைப்போ புகார் அளித்தால் 4 மணி நேரத்தில் தெருநாய்களை பிடிக்க வேண்டும். இதில் யாராவது குறுக்கீட்டு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும். அவற்றை விடுவிக்கவும் கூடாது என்று தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


