எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தூய்மை பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறதா என ஐகோர்ட்டு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6-வது மண்டலங்களில் ரூ.276 கோடி தூய்மைப்பணி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16-ந்தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள், 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த போராட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரி தொடரப்படும் வழக்கை அவசர வழக்காக கருதி உடனே விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவச்தவா, நீதிபதி சுந்தர்மோகன் முன்பு நேற்று முன்தினம் காலையில் வக்கீல் வினோத் என்பவர் முறையிட்டார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை தாக்கல் செய்தால், நேற்று விசாரிப்பதாக கூறியிருந்தனர். ஆனால், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இதையடுத்து, தலைமை நீதிபதி அமர்வில் வக்கீல் ஆஜராகி, மீண்டும் நேற்று முன்தினம் வைத்த கோரிக்கையை முன் வைத்தார். அதற்கு நீதிபதிகள், நீங்கள் தாக்கல் செய்த மனுவில் குறைபாடுகள் உள்ளதாக பதிவுத்துறை கூறியுள்ளது. இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய மனு தாக்கல் செய்தார், அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றனர். அப்போது குறுக்கிட்ட அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவாக உள்ளது. ஆனால், தூய்மை பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போல ஒரு போலி பிம்பத்தை சிலர் ஏற்படுத்துகின்றனர் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


