Idhayam Matrimony

உத்தரகாசி பேரிடரில் 66 பேர் மாயம்: அதிநவீன கருவிகள் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2025      இந்தியா
Uttarakhand 2025-06-29

Source: provided

டேராடூன் : உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் மாயமான 66 பேரை, தேடும் பணிகளில் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாசியில் கடந்த ஆக.5 ஆம் தேதி, மேகவெடிப்பினால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் தாராலி பகுதியில் இருந்த ஏராளமான குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டு சேதமாகின. இதனால், தற்போது வரை 22 நேபாள தொழிலாளிகள் உள்பட 66 பேர் மாயமானதாகக் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாயமானவர்களின் நிலைக் குறித்து தற்போது வரை தெரியவராத நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள், நேற்று (ஆக.11) பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சேதனைகளை மேற்கொண்டனர். இருப்பினும், அங்கு பெய்து வரும் தொடர் மழையால், தாராலி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதையடுத்து, புவியியல் நிபுணர்கள் நிலத்தை ஊடுருவும் அதிநவின ரேடார் கருவிகளின் உதவியுடன், இடிபாடுகளினுள் சிக்கியுள்ள மனிதர்களைத் தேடும் பணிகளை நேற்று (ஆக.12) தொடங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து