Idhayam Matrimony

தூய்மை பணியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்கு

புதன்கிழமை, 13 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Tamilsai-1

சென்னை, தூய்மை பணியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சென்னை மாநகராட்சி மண்டலம் 5,6 ஆகியவற்றில் தூய்மை பணி தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ம் தேதி முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மை பணியாளர்களுடன் அரசு நடத்தி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நாடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

மேலும், தூய்மை பணியாளர்களை ரிப்பன் கட்டிட பகுதியில் இருந்து அப்புறப்படுத்த காவல்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்கள் நேற்று இரவுக்குள் ரிப்பன் கட்டிட பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்களை பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலை சந்தித்தார். தடையை மீறி போராட்டம் நடைபெறும் ரிப்பன் மாளிகை கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற தமிழிசை சவுந்தரராஜன் தூய்மை பணியாளர்களை சந்தித்தார்.

இதையடுத்து, தமிழிசை சவுந்தரராஜன் மீது பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோர்ட்டு உத்தரவை மீறி தூய்மை பணியாளர்களை சந்தித்ததாக தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து