எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்ற கேள்விக்கு அமெரிக்க பதில் அளிக்க மறுத்து விட்டது.
ஜம்மு-காஷ்மீரில் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. அதன்பின் மே 7 முதல் மே 10-ம் தேதி வரை 88 மணி நேரம் இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை ஏற்பட்டது. பின்னர் இரு நாடுகளும் சண்டையை நிறுத்திக் கொள்ள சம்மதித்தன.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என பாகிஸ்தான் தெரிவித்தது. இதில் ரபேல் விமானங்களும் அடங்கும் எனத் தெரிவித்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 5-க்கும் மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன எனத் தெரிவித்தார். ஆனால் பாகிஸ்தான் போர் விமானங்களா? அலல்து இந்தயி போர் விமானங்களா? என்று அவர் குறிப்பிடவில்லை.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன்னதாக இந்திய விமானப்படை தளபதி, பாகிஸ்தானைச் சேர்ந்து 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம். மேலும், ஒரு பெரிய விமானத்தை வீழ்த்தினோம் எனத் தெரிவித்தார். இந்த நிலையில் ஆங்கிலப்பத்திரிகை ஒன்று அமெரிக்க அரசிடம், எப்-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியது.
இதற்கு அமெரிக்கா நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டது. மேலும், எப்-16 விமானங்களைப் பற்றி விவாதிக்க பாகிஸ்தான் அரசாங்கத்திடம் நாங்கள் உங்களைப் பரிந்துரைக்கிறோம் எனக் கூறியுள்ளது. அமெரிக்க நிறுவனம்தான் பாகிஸ்தானுக்கு எப்-16 போர் விமானத்தை வழங்கியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தொழில்நுட்ப ஆதரவு குழுக்கள் என்ற குழு பாகிஸ்தானில் 24/7 என்ற அடிப்படையில் இயங்கி வருகிறது. இந்த குழு எப்-16 போர் விமானத்தின் முழு விவரத்தையும் ஒப்பந்த்தின்படி அறிந்து கொள்வது அவர்களது கடமையாகும். அப்படி இருக்கும்போது எப்-16 போர் விமானம் குறித்த தகவல்கள் அமெரிக்காவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


