எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம், சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதித்தும், 16 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு செய்தும் இலங்கையின் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற ஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் ஜேசு, அண்ணாமலை, கல்யாண ராமன், செய்யது இப்ராஹிம், முனிஸ்வரன், செல்வம், காந்திவேல் உள்பட 8 மீனவர்களை தலைமன்னார் அருகே இலங்கை கடற்படையினர் ஜூன் 29-ம் தேதி சிறைப்பிடித்தனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றக் காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களின் காவல் நேற்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைந்ததைத் தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 8 மீனவர்களுக்கு தலா இலங்கை மதிப்பின்படி தலா ரூ.5 லட்சம் என ரூ.40 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்திய மதிப்பின்படி ரூ.9 லட்சத்து 33 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராத தொகை கட்டிய பின் 8 மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, ஜூன் 30-ம் தேதி அன்று சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்கள், ஜூலை 22-ம் தேதி அன்று சிறைபிடிக்கப்பட்ட 4 மீனவர்கள், ஜூலை 28-ம் தேதி அன்று சிறைபிடிக்கப்பட்ட 5 மீனவர்கள் என மொத்தம் 16 மீனவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


